தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையத்தில், மே 9ம்
தேதி முதல், மின்னணு பயிற்சி வகுப்பு துவங்குகிறது. இது குறித்து,
தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையம் வெளியிட்ட அறிக்கை:
மாணவர்களிடையே, அறிவியல் ஆர்வத்தை வளர்க்க, தமிழ்நாடு
அறிவியல் தொழில்நுட்ப மையம், பயிற்சிகளை நடத்துகிறது. இந்தாண்டு கோடை
முகாமில், மின்னணு பயிற்சி, மே 9ம் தேதி துவங்கி, 11ம் தேதி வரை நடக்கிறது.
காலை, 10:30 முதல், மாலை 4:30 மணி வரை நடக்கும் பயிற்சி
முகாமில், 7, 8, 9ம் வகுப்பு மாணவர்கள் பங்கு பெறலாம். மூன்று நாள்
நடக்கும் பயிற்சி முகாமில், மின்னணு அடிப்படை, மின்னணு பாகங்கள், பல்வேறு
துறையில் மின்னணு பயன்பாடு உள்ளிட்டவை கற்று தரப்படும்.
ஆர்வமுள்ளோர், 044-2441 0025 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு, பெயர்களை பதிவு செய்துகொள்ளலாம்.
No comments:
Post a Comment